நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பல வாரங்களாக விவசாயிகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
மத்திய அமைச்சரின் வாக்குறுதிக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. இதை அடுத்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் வறட்சி நிவாரணம் அதிகப்படுத்தி வழங்க கோரியும்,விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய கோரியும் இரண்டு வார காலத்திற்கு மேலாக பல்வேறு விதமான போராட்டங்களில் டெல்லியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய அமைச்சர் அளித்த வாக்குறுதிக்கு பின்னரே தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைப்பதாக அறிவிக்க பட்டது. அமைச்சர் அளித்த வாக்குறுதி பொய்யாகி இருப்பதால் நேற்று முதல் சமூக வலை தளங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் மீண்டும் போராட்டம் நடத்த தயாராக இருக்கும் படி பல்வேறு பேஸ்புக் பக்கங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சென்னை மெரினாவில் காவல்துறை அதிக படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது. மெரினா விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த நேரத்திலும் மாணவர்கள் போராட்டதில் இறங்கலாம் என்று அவர்களின் சமூக வலைத்தள பதிவுகளின் மூலம் பார்க்க முடிகிறது.