வெளியே வந்த விவசாயிகள் கூறும்போது, விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் திட்டமான நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திட்டம் அறிவித்த மறுநாளில் இருந்து விவசாயிகள் போராட்டம் செய்தும் மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் விவசாயிகளின் கோரிக்கையை மதிக்காமல் நேற்று மத்திய அரசு ஜெம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மதிக்காத மத்திய அரசை கண்டித்து இன்று விவசாயிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்துள்ளோம் என்றனர்.
இந்த கூட்டதிற்கு வந்த விவசாயிகள் நெடுவாசல் நெடுவாசலில் ஒஎன்ஜிசி நிறுவனம் கைகயப்படுத்தியுள்ள குத்தகை நிலத்தை அந்தந்த விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுவும் கொடுத்தனர். விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.