தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியவை இந்த முன்னணியில் உள்ளன.
தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை காண்பதற்காவே இந்த முன்னணி உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கூறுகிறார்.
நாட்டின் தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தாலும், தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை, அந்தக் கூட்டமைப்பு நிறைவேற்றவில்லை என ஆனந்த சங்கரி குற்றஞ்சாட்டுகிறார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்ற தவறி விட்டது எனக் கூறும் அவர், புதிய முன்னணி இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தும் எனவும் கூறுகிறார்.
இந்த முன்னணியில் மேலும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.