இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான மே 18 நினைவேந்தல் நிகழ்வு, வடக்கு மாகாண சபையினால் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப் போர் முற்றுப்பெற்ற முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே 18 ஆம் திகதி நடைபெற்றது. இந்தநிலையில், இவ்வருடமும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒழுங்கமைப்புக்கள் வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.