தகவல் கசிந்த விவகாரம்: "எனது தரவுகளும் எடுக்கப்பட்டுள்ளன" - மார்க் சக்கர்பர்க்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2018 (புதன்கிழமை)
இரண்டாவது நாளாக வாஷிங்டன்னில் கேட்கப்பட்ட கேள்விகளின்போது, சக்கர்பர்க் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இன்னொரு முன்னேற்றமாக, இதில் ஈடுபட்டுள்ள அரசியல் ஆலோசனை நிறுவனத்தின் தற்காலிக தலைமை செயலதிகாரி பதவி இறங்குவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி தன்னுடைய நிறுவனம் ஆய்வு நடத்தி வருவதாகவும் சக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட தரவுகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்காக சேகரித்த ஆய்வாளர் இருக்கின்ற இடத்தில் இந்த நிறுவப்பட்டுள்ளது.
"இதுபோன்ற செல்பேசி மென்பொருட்களை வடிவமைக்கும் பிற ஆய்வாளர்கள் பலர் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தோடு மொத்த திட்டமும் தொடபுடையதாக உள்ளதை கண்டறிந்துள்ளோம்" என்று சக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.
எனவே, ஒட்டுமொத்தமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மோசமான செயல்கள் ஏதாவது நடைபெறுகிறதா என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதற்கு எங்களிடம் இருந்து பலமான எதிர்வினை இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கான பதில் ஒன்றை தயாரித்து வருவதாக இந்தப் பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
சுமார் மில்லியன் கண்க்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் 2015ம் ஆண்டு அழித்துவிட்டதை பரிசீலிக்க தவறிவிட்டதற்கு முன்னதாக சக்கர்பர்க் மன்னிப்பு கோரியிருந்தார்.
மாறாக, ஃபேஸ்புக் சமூக வலைதள விதிகளுக்கு எதிராக திரட்டப்பட்ட தரவுகளை இந்த அரசியல் ஆலோசனை நிறுவனமே அழித்துவிட்டதாக அதுவே சுயசான்று அளிக்க வேண்டுமென ஃபேஸ்புக் விட்டுள்ளது.
இந்த செல்பேசி மென்பொருள் வடிவமைப்பாளரான கோகான் மற்றும் கேம்பிரிட்ஜ் அனல்டிக்கா நிறுவனத்தோடு நடைபெற்றவை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என்று மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.