முதலமைச்சர் ஆவதே எனது விருப்பம்: தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2016 (திங்கட்கிழமை)
அரசியல் மீது ஆர்வம் உள்ளதாக கூறியுள்ள நடிகர் கஞ்சா கருப்பு, முதலமைச்சர் ஆவதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அக்கட்சியின் திருச்சொங்கோடு ஒன்றிய முன்னாள் செயலாளர் முத்துமணி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சா கருப்பு, என்னை யாராவது அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் 4 நாட்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவியை கேட்டு பெறுவேன். அதற்குள் செய்ய வேண்டியதை செய்துவிடலாம். நான் முதலமைச்சர் ஆனால் பள்ளியில் மதிய உணவுவக்கு மாணவர் ஒருவருக்கு முழு கோழி ஒன்று வழங்கப்படும். இது நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை.
சுயேட்சை வேட்பாளர் முத்துமணி வெற்றி பெற்றால் அனைத்து நதிகளும் இணைக்கப்படும். பல்வேறு கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. முத்துமணி கட்சி ஆரம்பித்தால் நானும், நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம்.
என்னிடம் மேனேஜராக இருந்தவர் மூன்றரை கோடி ரூபாய் சுருட்டிக்கொண்டு போய்விட்டார். இப்போது படம் எடுக்கிறோமம் என்று சொல்லி ஒருவன் இரண்டரை கோடியை சுட்டிவிட்டார். நான் படிக்காமல் போனதால் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ஆகவே நான் முதலமைச்சரானால் கல்வி இலவசம்.