800 ஆண்டுகளுக்கு பின் திருத்தந்தை பிரான்சிஸ் ஐக்கிய அரேபிய அரசரை சந்தித்து நல்லுறவிற்கு வழிவகுத்துள்ளார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2019 (திங்கட்கிழமை)
1219ம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசி கடும் போரின் மத்தியில் சுல்தான் அல் மாலிக் அல் கமிலை சந்தித்து அமைதிக்கு வழிவகுத்தார். 800 ஆண்டுகளுக்கு பின் பிரான்சிஸ் அசிசியின் பெயரை தாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் ஐக்கிய அரேபிய அரசரை சந்தித்து நல்லுறவிற்கு வழிவகுத்துள்ளார்.
இதுவே கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் முதன்முறை ஒரு திருத்தந்தை அரேபிய பகுதிக்கு சென்றுள்ளார். முதன்முறை அரேபிய வளைக்குடாவில் பகிரங்கமாக பொதுவெளியில் திருப்பலி கிறிஸ்தவ வழிப்பாடு நடைப்பெற்றது. 185000 மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இத்திருப்பலி எட்டிஹாட் மற்றும் எமிரேட்ஸ் விமானங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.