கென்யா நோக்கி புற்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து நைரோபி நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எத்தியோப்பிய நேரப்படி இன்று காலை 8.44 அளவில் புறப்பட்ட விமானம் தலைநகரில் இருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் பயணித்த 33 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 149 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன,
பிரதமர் அலுவலகத்தின் இந்த டுவிட்டர் செய்தியினால் விமானத்தில் பயணித்த பயணிகளில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
விமானம் விபத்துக்குள்ளாமையை எத்தியோப்பிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.