கிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகிய இளைஞன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர் என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்று கிளிநொச்சியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று மாலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.
நாட்டில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது போனால் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்?
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்தும், மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
ஓமந்தை சோதனைச்சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், பதிலீடாக வேறு 06 ஏக்கர் காணி இராணுவத்திற்கு வழங்குவதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்தார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ......
எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன்’ என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடா்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளது.
தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்திலும், மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் இம்முறை நினைவேந்தல் செய்யப்படவுள்ளது.
கொக்குவிலில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கஜன், சுலக்சனின் பெற்றோருக்கு இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்.....