அஜித் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த படம் வேதாளம். இப்படம் முதல் வார இறுதியில் ரூ 48 கோடி வசூல் செய்தது. மேலும், வேதாளம் செவ்வாய் கிழமை வந்தது.
இதன் மூலம் வார முடிவில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ 8 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள விஜய்யின் தெறி 4 நாள் முடிவில் ரூ 31 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இதன் சராசரி விகிதம் ஒரு நாளைக்கு ரூ 7.75 கோடி வர ஓப்பனிங்கில் சற்று பின் தங்கியுள்ளது, தெறி செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ரிலிஸ் ஆகாதது குறிப்பிடத்தக்கது.