பிரான்ஸ் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு, 14 நாட்களுக்கு சலுகை!விபரங்கள் உள்ளே..
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2020 (சனிக்கிழமை)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக, 14 நாட்களுக்கு சம்பளக் கொடுப்பனவுடன் வீடுகளில் பிள்ளைகளை பராமரிப்பதற்கு வழிசெய்துள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்பட இருக்கின்ற நிலையில், பிள்ளைகளை வீடுகளில் பராமரிக்க ஏதுவாக இதனை அரசாங்கம் அறிவித்துள்ளது.
16 வயதுக்கு குறைவான பிள்ளைகளை கொண்டிருக்கின்ற பெற்றோர்கள், பிள்ளைகளை வீடுகளில் பராமரிக்க விரும்பின், தொழில்புரிகின்ற நிறுவனத்தின் ஊடாக பதிவினை செய்து இச்சலுகையினை பெற முடியும்.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் குறித்த வேலையை செய்ய முடியாதவர்கள் இந்த சலுகையினை பெறுவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 14 நாட்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட இருப்பதாகவும், பின்னர் அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.