படிவத்துடன் செல்லாத அனைவரும் (வயது வித்தியாசம் இல்லாமல்) தண்டம் செலுத்த வேண்டி வரும்!
இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி முதல் 15 நாட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடையுத்தரவுகளுக்கு அமைய, அத்தியாவசிய தேவைகளாய் வெளியில் செல்லபவர்களுக்கான படிவம் உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
பெயர் :
பிறந்த திகதி :
முகவரி :
ஆகிய விடயங்களை பதிவிட்டு, கீழ் வரும் விடயங்களில் காரணத்திற்கான ஒன்றை புள்ளியிட்டு , கீழே திகதியிட்டு ஒப்பமிடவேண்டும்.
– வீடுகளில் இருந்து வேலை செய்யாத தொழில்துறை சார்ந்தவர்கள், தமது வேலைத்தளங்களுக்கு சென்றே பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள்.
( அத்தாட்சிபடுத்தவேண்டும்)
– அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொருட்டு, வீட்டுக்கு அருகில் உள்ள நிறுவனத்துக்கு செல்வதற்கு
இந்த நடைமுறைகளை நாடுமுழுவதும் கண்காணிப்பதற்கு 1 இலட்சம் பாதுகாப்பு தரப்பினர் கடையில் ஈடுபடுத்தப்பட இருப்பதோடு, இப்பத்திரம் இல்லாது செல்பவர்கள் மற்றும் பொறுப்பற்ற முறையில் வெளியில் நடமாடுபவர்கள் 28€ இருந்து 135€ வரை தண்டம் செலுத்த வேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படிவத்தினை தரையிறக்கம் செய்ய முடியாதவர்கள் இதனை கையால் எழுதி கொண்டு செல்லமுடியும்.