தமிழர்களே லண்டனில் ஏதவது தேவை என்றால் போன் செய்யலாம் !
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2020 (புதன்கிழமை)
லண்டனில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையை கருத்தில் கொண்டு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) தமிழர்களுக்கு உதவிகளை புரிய முன் வந்துள்ளது. இவர்கள் 4 திசைகளாக பிரித்து, பல இளையோர்களை களம் இறக்கியுள்ளார்கள். நீங்கள் சுகவீனம் காரணமாக வீட்டில் முடங்கி இருந்தால். உங்களுக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கீழ் காணும் எண்ணோடு தொடர்பு கொண்டால். TCC உறுப்பினர்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள். மொழி பெயர்ப்பு சம்பந்தமாக உதவிகள் தேவை என்றாலும் அவர்கள் செய்வார்கள்.
தமிழர்களை தமிழர்களே பாதுகாக்க வேண்டும்: விண்ணில் இருந்து குதித்து எவரும் பாதுகாகப் போவது இல்லை. எனவே நமக்கு உதவியாக நாமே இருப்போம் என்று ஆரம்பிக்கப்பட்டதே இந்த உதவித் திட்டம்.
மேலும் முதியவர்களுக்கு போக்குவரத்து உதவிகளையும், TCC அமைப்பினர் செய்து கொடுக்க முன் வந்துள்ளார்கள். எனவே இனி தமிழ் முதியவர்கள் லண்டனில் எங்கேயாவது அவசரமாக செல்ல வேண்டும் என்றால். அவசர உதவியை நாடலாம். பிரித்தானிய அரசு கூட, ஏற்படுத்திக் கொடுக்காத இந்த சேவையை தாமாகவே முன் வந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இலவசமாக செய்ய காத்திருக்கிறார்கள்.
எனவே இளையோர்கள் மற்றும் ஏனையவர்கள், யாரவது நீங்களும் இணைந்து தமிழர்களுக்கு உதவ விரும்பினால் கீழ் காணும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். “வருமுன் காப்போம்” என்ற இந்த திட்டத்தை TCC லண்டனில் ஏற்படுத்தியுள்ளமை ஒரு முற்போக்கு சிந்தனை ஆகும்.
லண்டனில் பல சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு சமுதாய மக்களும் இது போன்ற ஒரு உதவி திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. லண்டன் தமிழர் ஒரு முன் உதாரணமாக இதனை ஆரம்பித்துள்ளார்கள். எனவே உங்களுக்கு தெரிந்த அனைத்து மக்களோடும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான மக்கள் இந்த உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவம் தொடர்பாக எந்த ஒரு உதவியையும் TCC அமைப்பினர் செய்ய மாட்டார்கள். எனவே நீங்கள் நோயால் பாதிக்கப்பட்டால், தயவு செய்து 111 என்ற இலக்கத்தை அழுத்தி தொடர்பு கொள்ளவும். ஏனைய உதவிகள் தேவைப்பட்டால் TCC அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.