கொரோனாவின் கோரப்பிடியில் உலகம்: ஆனால் வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2020 (சனிக்கிழமை)
கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில் கடலுக்குள் குறுகிய தூர பொலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டை வடகொரியா நேற்று ஏவியுள்ளது.
வடக்கு பியாங்கான் மாகாணத்தில் (North Pyongan province) இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும், ஜப்பான் அருகே கிழக்கு கடல் பகுதியில் விழுந்தன.
அந்த 2 ஏவுகணைகளும் எத்தனை கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து சென்று தாக்கும் நடத்தும் வல்லமை கொண்டவை என்பது தெரியவில்லை. ஆனால் அவை பொலிஸ்டிக் ரகத்தை சேர்ந்தவை என்று மட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இம்மாதத் தொடக்கத்திலும் வடகொரியா குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவியது. இந்நிலையில் அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையிலும், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்களைக் காவுகொண்டுவரும் நிலையிலும் இவ்வாறு ஏவகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளமை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.