அத்தியாவசியத் தேவையோ, அல்லது முறையான பத்திரங்களோ இல்லாமல் வெளியே சென்ற 40.000 பேரிற்குக் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்ததே. இந்தக் குற்ப்பணம் 135€ ஆகவும் 45 நாட்களிற்குள் செலுத்தப்படாவிட்டால் அது 375€ வாகவும் அறிவிடப்படும். அத்துடன் தேசியச் சுய ஒழுக்கத்திற்கான பயிற்சி வகுப்பில் கட்டாயமாகக் கலந்து கொள்ளவும் நேரிடும். இந்த நடைமுறைகள் நேற்று 21ம் திகதி மாற்றிமைக்கப்பட்டுள்ளது.
15 நாட்களிற்குள் மீண்டும் தவறு செய்தால் 1500€ குற்றப்பணம் அறிவிடப்படும்.
30 நாட்களிற்குள் நான்கு தடவை இதே தவறினைச் செய்தால் 3.750€ குற்றப்பணமும் ஆறுமாதச் சிறைத்தண்ணடனையும் வழங்கப்படும்.
இவற்றையெல்லாம் விட மிக முக்கியமாக, வாகனத்தில் சென்று, இந்தச் சட்டத்தினை மீறினால், உங்களது வாகனச் சாரதிப்பத்திரம் ஒரு வருடத்திற்குத் தடைசெய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சென்ற வாகனம் ஒரு வருடத்திற்குப் பறிமுதல் செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளதெனவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.