கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது பிரான்சில் இடம்பெறும் முதலாவது மருத்துவரின் உயிரிழப்பாகும்.
நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக சற்று முன்னர் சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். <<நேற்று சனிக்கிழமை இரவு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தாக்கத்தினால் மருத்துவர் உயிரிழப்பது பிரான்சில் இதுவே முதல் தடவை. அவரின் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்களையும் ஆதரவினையும் தெரிவிக்கின்றோம்>> என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
'மருத்துவர் குறித்த தகவல்கள் வெளியிடப்படமாட்டாது' எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
*அறுபது வயதுடைய மருத்துவர் Oise நகரைச் சேர்ந்தவர் எனவும், Lille பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிகின்றவர் எனவும் அறிய முடிகிறது.