முதன்முதலாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உலகின் சுமார் 160 நாடுகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே தன்னுடைய தோழியின் நிலை தொடர்பில் குறித்த நபர் ஆதங்கப்படும் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த காணொளியில்,
இவ்வளவு நாளும் கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட எத்தனையோ நாடுகளில் வந்த பிறகும் கூட அது தொடர்பான மெத்தன போக்கு எம்மிடையே காணப்படுகிறது.
ஆனால் இன்று என்னுடைய நெருங்கிய தோழியொருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
இத்தனைக்கும் அவருடைய மகள் பிரித்தானியாவில் ஒரு வைத்தியர். அவரால் கூட தனது தாயை சென்று பார்க்க முடியவில்லை.
இந்த நோய் வந்த பிறகு நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக வீட்டை விட்டு வெளியில் போக வேண்டாம் என கூறுகின்றார்கள்.
ஆனால் முதலில் நாம் கொக்கரித்தோம். இதை விட பெரிய பெரிய ஆபத்துக்களையெல்லாம் நாம் பார்த்து விட்டோம் என கூறினோம்.
ஆனால் பதினைந்து நாட்களுக்கு முதல் குறித்த தோழி உட்பட அனைவரும் ஒன்றாக இருந்தோம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மயங்கி விழுந்து இப்பொழுது சுவாசப்பை மின் இயந்திரத்தால் செயற்பட்டு வருகிறது.
யாராலும் அவரை பார்க்க முடியாது. வேறு வியாதிகளுக்கு நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் உதவியாக இருக்க முடியும்.ஆனால் இந்த நோய் வந்தால் அன்று முதல், நீங்கள் குணமாகி திரும்பி வந்தாலொழிய அதுவரை யாரையும் பார்க்க முடியாது.
எனவே எந்த நேரத்திலும் அவதானமாக இருங்கள். ஏனையோரிடம் இருந்து விலகி இருங்கள் என தனது வேதனையை இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.
இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள், இது போன்ற மேலும் பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்.follow