கபாலி திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், வரவேற்புடனும் வெளியான இந்த திரைப்படம் நல்ல குவாலிட்டியுடன் இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது.
கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சில இணையதளங்கள் முடக்கப்பட்டன.
ஆனால், நேற்று கபாலியில் ரஜினி வரும் ஒப்பனிங் காட்சி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினர். இது வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவியது. பின்னர் இணையதளங்களில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு கபாலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பின்னர் இந்த திரைப்படம் இணையதளங்களில் வெளியானது. சுமார் 1 மணி 50 நிமிடம் ஓடும் படம் அதில் உள்ளது. இந்த படத்தை குறுகிய நேரத்தில் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
நல்ல வீடியோ குவாலிட்டியுடன் கபாலி முழுப்படமும் வெளியாகி உள்ளது தயாரிப்பாளர் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.