தனிநபர் சாதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை... இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)
அணியின் வெற்றியே எங்களுக்கு முக்கியம். தனிநபர் ஒரு சாதனை மைல்கல்லை எட்ட வேண்டும் என்பதற்காக விலைமதிப்பில்லாத நேரத்தை வீணடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கடந்த காலங்களில் பல சமயம் அப்படி நடந்து கொண்டதால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனவே தான், சக வீரர்களிடம் தனிப்பட்ட சாதனை மைல்கல் பற்றி கவலைப்படாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று வலியுறுத்தி வருகிறேன்.
சூழ்நிலைக்கேற்ப வியூகத்தை மாற்றிக் கொள்வதும், களமிறங்கும் வீரர்கள் பற்றி சுதந்திரமாக முடிவு செய்வதும் வெற்றி வாய்ப்பை உருவாக்க உதவுகிறது. மொத்ததில் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றுவதே எங்கள் நோக்கமாக உள்ளது. ஒரு போட்டியில் வென்றுவிட்டு, அதன் பிறகு போதிய முனைப்பு காட்டாமல் இருந்தால் தொடர்களை கைப்பற்ற முடியாது.
அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து உத்வேகத்துடன் போராடுவதால் தால் தொடர்ச்சியாக ஐந்து தொடர்களை கைப்பற்ற முடிந்துள்ளது. தற்போதுள்ள இளம் வீரர்கள் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நீடிப்பார்கள் என்பதால், இந்திய அணியின் வெற்றி நடை தொடரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. உலகத் தரம் வாய்ந்த முன்னணி அணியாக இந்தியா நீண்ட காலம் நிலைத்திருக்கும். இங்கிலாந்துக்கு எதிராக பெற்றுள்ள இந்த வெற்றி மிகச் சிறப்பானது. கேப்டனாக மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.