(07/01/2017) அன்று இடம்பெற்ற மின் னொளியிலான உதைப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டது நாவாந்துறை சென்நீக்கிலஸ் அணி எதிர் வதிரி டயமன்ஸ் அணி,
இவ்விரு அணிகளும் தமது சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தி கிண்ணத்தை தனதாக போராடியது ஆனால் முதல் பாதியாட்டத்தில் 23வது நிமிடத்தில் டயமன்ஸ் அணி வீரர் துஷிகரன் கோல் ஒன்றை போட்டார் முதல் பாதியாட்டம் 1:0 என்ற கோல் அடிப்படையில் நிறைவுற்றது
இரண்டாவது பாதியாட்டத்தில் சென் நீக்கிலஸ் சிறப்பாக ஆடிய போதும் கோல் பெறும் வாய்ப்புக்களை தவறவிட்டதினால் மீண்டும் 58வது நிமிடத்தில் டயமன்ஸ் அணிக்கு ஓரு வாய்ப்பாக தண்ட உதைப்பு மூலமான கோல் போடும் வாய்ப்பு அதனை கோலாக மாற்றினார் பின் கள வீரர் உஷானந்தன் இறுதி வரை போராடியது சென்நீக்கிலஸ் அணி இறுதியாட்ட நேர முடிவில் 2:0 என்ற கோல் கணக்கினால் கிண்ணத்தை சுவீகரித்தது வதிரி டயமன்ஸ் அணி.வாழ்த்துக்கள் இரு அணியினருக்கும்
ஆட்ட நாயகன் டயமன்ஸ் அணி வீரர் உஷானந்தன்,
தொடர் ஆட்ட நாயகன் சென் நீக்கிலஸ் அணி வீரர்.
சிறந்த பின் கள வீரர் சென் நீக்கிலஸ் அணி வீரர் ஜெயராஜ்.
சிறந்த கோல் காப்பாளர் டயமன்ஸ் அணி வீரர் ஜெனார்த்தன் தெரிவு செய்யப்படடார்.