கட்டாக்கில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் யுவராஜ் சிங் 150 ரன்களை குவித்தார். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
யுவராஜ் பேசியதாவது, புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய முதல் 2-3 ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாமா என்று சிந்தித்தேன்.
ஆனால், அதில் இருந்து மீண்டு இந்த பயணத்தை தொடருவதற்கு நிறைய பேர் எனக்கு உதவிகரமாக இருந்தனர். உடல்தகுதியை தக்க வைக்க முன்பை விட அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருந்தது.
ஒரு நாள் போட்டியில் 150 ரன்களை எட்ட வேண்டும் என்பது எனது கனவு. இது தான் எனது அதிகபட்ச ரன்னாகும். அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சதம் கண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.