கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் ஒருமாத காலமாக போராட்டத்தினை தொடர்ந்த நிலையில் இன்று 54 பேரின் காணிகள் அரசாங்க அதிபரினால் உத்தியோக பூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் காணிகளில் ஒருபகுதி நிலங்களுக்கு மக்களை செல்ல விமானப்படையினர் அனுமதிக்கவில்லை என்று குறித்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அவ்விடத்திற்கு சென்ற வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் விமானப்படை அதிகாரியிடம் இது தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.இதற்கு பதிலளித்த விமானப்படை அதிகாரி அரசாங்க அதிபர் காட்டிய எல்லையிலேயே தாம் நிலை கொண்டுள்ளதாகவும் அவற்றையும் விடுவிக்கும்படி தமக்கு கட்டளை வந்தால் தாம் விடுவிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று குறித்த இடத்திற்கு காணி அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் அங்கு சென்று வரைபடத்தின்படி பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் இன்று அவ்விடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு காணிகள் வழங்கும் முன்னர் விமானப்படையினரின் முகாமிற்குள் சென்று விடுவிக்கப்படும் காணிகளை பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த நிலையில் இன்று அவ்விடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு காணிகள் வழங்கும் முன்னர் விமானப்படையினரின் முகாமிற்குள் சென்று விடுவிக்கப்படும் காணிகளை பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.