25ம் திகதி தொடங்கிய போட்டியில் முதல் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய 300 ஓட்டங்கள் எடுத்தது. இதை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 332 ஓட்டங்கள் எடுத்தது.32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
106 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழக்காமல் 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது.ராகுல் 13 ஓட்டங்களுடனும், முரளி விஜய் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
87 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நான்காம் நாள் களமிறங்கிய இந்திய 2 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றிப்பெற்றது.இதன் மூலம் 2-1 என டெஸ்ட தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது இந்தியா. ராஹனே தலைமையில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தொடர்ந்து 7 டெஸ்ட் தொடர்களை இந்திய வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.