தோனியை அணியைவிட்டு வெளியேற்றும் முடிவில் பூனே அணி உரிமையாளர்? ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2017 (புதன்கிழமை)
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 வருடம் தடை விதிக்கப்பட்டதும், புனே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் தோனி.
ஆனால் கடந்த வருட ஐபிஎல் தொடரில் புனே 7 வது இடத்தையே பிடித்தது. சிஎஸ்கே அணி கேப்டனாக தோனி இருந்தபோது சிஎஸ்கே அணி 8 தொடர்களில் ஒன்றில் கூட பிளே-ஆப் சுற்றை தாண்டாமல் இருந்ததில்லை.
இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியை கேப்டன் பதவியிலிருந்து விலக்கி ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக்கப்பட்டார். மேலும், நேற்றைய ஆட்டத்தில் ஸ்மித் பங்கேற்காததால் ரஹானே கேப்டனாக களமிறங்கினார்.
டி20 போட்டிகளில் ஒரு பேட்ஸ் மேனுக்கு முக்கியமானது ஸ்டிரைக் ரேட். நடப்பாண்டு ஐபிஎல்-ல் தோனியின் ஸ்டிரைக் ரேட் 65.12 மட்டுமே. இந்நிலையில் தோனியை அணியைவிட்டு நீக்கும் முடிவில் பூனே அணி தலைவர் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இச்செய்தி தோனி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இதற்கெல்லாம் அடுத்த ஆண்டு தோனி தலைமையில் சிஎஸ்கே அணி போட்டியில் களமிறங்கி தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிரது. சிஎஸ்கே அணி உறிமையாளர் சீனிவாசன் இது குறித்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.