வடமாகண லீக்குகளால் பழிவாங்கப்படும் யாழ் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2017 (வியாழக்கிழமை)
கடந்த காலங்களில் உதைபந்தாட்ட கழங்களை பாழக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கும் லீக்குகள் இவர்கள் வடமாகணத்தின் நன்மதிப்புக்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் வீரர்களையும் கழகங்ளையும் தண்டனை என்ற பெயரில் அவர்களின் திறமைகளை பாழக்கும் நிலையை ஏற்படுத்தி நிற்கின்றது.
வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி பலம் வாய்ந்த கரையோர பாரம்பரிய அணி தொடர்ந்தும் இலக்கு வைத்து நசுக்கப்படுவது முறையல்ல
பாரிய செலவுகள் மத்தியிலும் உதைபந்தாட்டத்தை நேசிக்கும் காரணத்தால் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரிவு 1 விளையாட்டும் கழகத்தை பல கழகங்களின் கூட்டு முயற்சியில் லீக்குகள் நசுக்குவது முறையல்ல
வலிகாமம் வடமராச்சி பருத்துறை லீக்குகள் உதைபந்தாட்டத்தை வளர்க்கும் நோக்கில் செயற்படும் இக்காலத்தில் யாழ் லீக்கு மட்டும் தமது அதிகார ஆணவத்தை காட்டுவதிலும் பணம் வசூலிப்பதிலும் குறியாக உள்ளனர்
பாழ் லீக் ( யாழ் லீக் ) 1975 களின் பின்னர் லீக் தன்னை வளர்க்கவும் இல்லை தன் அங்கத்துவ கழகங்களையும் வளர்க்கவில்லை மாறாக தடைகளை போட்டு அதனை நாசமாக்கியுள்ளன. இது சுயநலமல்ல ஒரு பொதுநலம்தான். தண்டனை என்பது ஒருவனை திருத்துவதாக அமையவேண்டும் மாறாக அழிப்பதாகவோ சீரழிப்பதாகவோ அமையக்கூடாது. லீக்கில் இருப்பவர்கள் தங்கள் பதவிகளை பாதுகாப்பதற்கு சில உதிரிகளை தங்கள் இருப்பிற்காக பயன்படுத்துதல்தான் தற்போதய நிலை. இந்நிலை மாற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதால் அனைத்து தடைகளையும் தகற்பதோடோ எமது விளையாட்டுத்துறையை வளர்த்தெடுக்க முடியும். எனவே அனைவரும் ஒன்றுணைந்து செயல்படுவோம்.
சொந்த மண்ணின் வளர்ச்சியை தடுப்பதற்கு அந்த அணியின் ரசிகர்களே பக்க பலமாக இருந்து வருகின்றனர்
ரசிகர்களை வைத்து பணம் சம்பாதிப்பவர்கள்தான் பிரச்சனைகளுக்கு ஒழுங்கும் செய்ய வேண்டும்
மாறாக அந்தந்த அணிகள் அல்ல
நவீன பெறிமுறைகளை கையாளும் உலக உதைபந்தாட்டம் கூட இப்படியான தண்டனைகளை ஓரு வீரனுக்கு வழங்கியது குறைவு வழங்கியதில்லை வீரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு போட்டித் தடையும் அபராதமும் தான் விதிப்பர்கள் அதைவிட்டு ஓரு வீரனின் விளையாட்டை மழுங்கடிக்கும் தண்டனையை விதிக்கமாட்டார்கள் அன்றைய போட்டியில் இவ்வளவு பெரிய தண்டனை விதிக்கும் அளவுக்கு பெரிதாக என்ன குழப்பம் நடை பெற்றதுதான் யாழ் விளையாட்டு ரசிகர்களின் கேள்வியாகயுள்ளது .அதற்காக ரசிகர்கள் குழப்பம் விளைவிக்கவில்லை என்ற அர்த்தமும் இல்லை
ஓர் வீரனை உருவாங்குவதற்கு கழகங்கள் எவ்வளவு பாடுபடுகின்றது என்பதை லீக்குகள் கருத்தில் கொள்வதில்லை அதிகார நாற்கலிகளில் பல கலங்களாக கட்டியனைத்துக் கொண்டு இருப்பவர்கள் குழப்பம் விளைவிக்கும் ரசிகர்களை ஏன் தண்டனை வழங்க சிந்திப்பதில்லை அதாவது அவர்களுக்கு போட்டி பார்க்கும் தடையை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட கழங்களுக் அறிவித்தல் கொடுப்பதும் போட்டி பார்க்க தடை விதித்தல் போன்ற விதிகளை எற்படுத்துவதால் இப்படியான குழப்பங்களை கட்டுப்படுத்த முடியும்.
கழகங்கள்
கழகத்தில் வெறுப்பு கொண்ட கழகங்கள் நவீன உபகரணங்களுடன் போட்டியில் ஏற்படும் அசாதரன நிலைமைகளை வீடியோ எடுத்து அவ்கழங்களை முடிக்க பயன்படுத்துவதும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆரோக்கியமான நிகழ்வுகள் அல்ல நாளை இது உங்களுக்கும் சிகழ வாய்ப்பிருக்கின்றது என்பதை மறந்து செயல்படுகின்றீகள் எனவே சம்பந்தப்பட்டவர்கள் இன் நிகழ்வை மீள் பார்வைக்கு உட்படுத்தி ஆரோக்கியமான எதிர்கலத்தை நோக்கி நகர்த்துமாறு விளையாட்டு ரசிகர்களின் ஆதங்கமாவுள்ளது
ரசிகள்கள்
ரசிகள்கள் பெறுப்புடனும் வீரர்களின் எதிர்கலத்தையும் வழர்ந்துவரும் சழூகத்தையும் சழூகத்திற்கு எற்படும் அவமானங்களையும் கருத்தில் கொண்டு பெறுப்புடனும் செயல்பட்டு வீரர்களை ஊக்கிவிக்கவும்.
JM Alestinஎங்கள ஊர் ஊர் எண்டு ஓர்மம் ஊட்டி வளத்த அண்ணா மாரும் பெரிய ஆக்களும் இப்ப தன் குடும்பம் என்றும் ஆதாயம் தேடியும் ஊரோடும் ஊர் பேயரோடும் விளையாட்டுகின்றனர்...
Kandasamy Veerasivaharanஇவ் வருட டான் தொடரின் அரையிறுதிப் போட்டி முடிவடைந்ததும் நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பற்றி போட்டி நடுவர் எழுத்து மூலமான கடிதம் ஒழுக்காற்றுக்குழுவிற்க்கு சமர்பிக்கப்பட்டதன் விளைவாகவும் ஒர் வீரருக்கும்... போட்டி முடிந்ததும் போட்டியில் தோல்வி பற்றி கேலிசெய்த ரசிகர் ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதற்காகவுமாக ஒர் வீரருக்குமாக சென்மேரீஸ் அணியின் முன்னணி வீரர் இருவருக்கு போட்டித்தடையும் தண்டப்பணமும் என தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்ற போதும்..சம்பவங்கள் இடம்பெற்றது உண்மையாக காணப்படுகின்ற நிலையில் வீரர்களுக்கான போட்டித்தடை அபராதம் என்பது ஒப்பீட்டு ரீதியில் அதிக பட்சமாகவே இருப்பதாக நாம் கருதுகின்றோம்...இரு வீரர்களுக்கும் தலா ஒன்றரை வருடத்திற்க்கு மேற்பட்டகால போட்டி தடையும் 1 இலச்சத்தி 50 தொகை அவராதம் என்பது ஒர் பெரிய விடயமாகும்...டான் அரையிறுதி காணொளி தொகுப்பில் இறுதி நேரத்தில் பார்த்தால் அனைவருக்கும் புரியும் நடுவருடன் ஏதோ வாதாடும் காட்சி மட்டுமே...(என்ன உரையாடியமை என்பது தெரியாது)...உரையாடல் மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது...இப்படியான குற்றத்திக்காக வீரர்களின் திறனை முடக்கும் முகமாக அதிக கால தண்டனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக காணப்படுகின்றது...ஒரு வேளை அன்றைய தினம் நடுவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு பாரிய குழப்ப நிலை ஏற்பட்டால் போட்டி ஒழுக்காற்று குழுவின் தண்டனை எவ்வாறு அமையும் என்பதை தற்போது கற்பனை செய்யமுடியாத ஒன்றாகவும் இருக்கின்றன... எது எவ்வாறெனினும்..உதைபந்தாட்டத்தில் ஒழுக்கம் என்பது முக்கியமாக காணப்படுகின்ற நிலையில் ஒவ் வொரு லீக்குகளும் போட்டிகளில் ஏற்படும் குற்றங்களின் தன்மை அடிப்படையில் ஒழுக்காற்றுக்குழு வின் தண்டனைகள் அமையவேண்டும்... ஒர் ரசிகராக பார்க்கும் போது ஒப்பீட்டு ரீதியில் டான் தொடரில் ஏற்பட்ட குழப்பத்தை விட வடமராச்சி பகுதியில் இடம்பெற்ற ஒர் இறுதியாட்டத்தில் ஏற்ப்பட்ட குழப்பம்..மற்றுமோர் தொடரில் சூப்பர் 8 ஆட்டத்தில் ஏற்ப்பட்ட குழப்பங்கள் மிக மோசமானது அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட லீக் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை...தங்கள் லீக் பகுதியில் இடம்பெறும் போட்டி மற்றும் குழப்பங்களுக்கு ஒர் பார்வையும் எனைய லீக் பகுதியில் இடம்பெறும் போட்டிகளில் தங்கள்லீக் அணிகள் குழப்பம் ஏற்படுத்தும் போது ஒர் பார்வையுமாக லீக்குகள் செயற்படுவதால்தான்...உதைபந்தாட்டத்தில் காலம்காலமாக வரும் குழப்ப நிலைகளை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவும் காணப்படுகின்றது....காலங்காலமாக உதைபந்தாட்டத்தில் ஒர் தனித்துவமான ஆட்டதை வெளிப்படுத்தும் சென்மேரீஸ்.. 2015 இல் பிரிவு 11 சம்பியன்..பிரிவு 1 மற்றும்FA cup இல் முன்னேற்றகரமான பங்கெடுப்பின் காரணமாக பலரது நன்மதிப்பை பெற்ற ஒர் அணியாக வலம் வந்த போதும்போட்டிகளில் போது ஒரு சில வீரர்கள் மற்றும் ரசிகர்கள் செயற்பாடுகளால் அணி விமர்சனங்களுக்குள் உள்ளாகி வந்ததும் குறிப்பிடத்தக்கது.2011 இல் இருந்து இலக்கு பார்க்கப்படு வருவதையும் தங்கள் அணியின் தர நிலைகளை உணராத சிலரது சிறிய செயல் சென்மேரீஸ் டான் தொடரில் பாரிய தண்டனைக்குள்ளாகியது...பாரிய இழப்பாகும்..எத்தொடராயினும்...பாடும்மீன், சென்மேரீஸ், றோயல் மற்றும் ஞானமுருகன் அணிகள் பங்கெடுப்பே அத்தொடரை விறுவிறுப்பாக்குவதுடன் தொடரில் பெரும் திரள் ரசிகர்களையும் காணமுடிகின்றது
Ajith Sebamalaiஅண்ணன் இத பார்கும் போது. பல விடையங்களும். உண்மையும் தெரிகிறது. யாழ் லீக்ல இருக்கும். உறுப்பினர்கள் கண்டிப்பாக பார்ப்பினம். யாழ்ப்பாணத்தில இருக்கிற லீக்கில பந்துக்கு நோகாம விளையாட வேணும். என்று சொல்லும் லீக்
Thushyanthan Singamமிக பொருத்தமான பதிவு. எமது மாவட்டத்தில் உள்ள லீக்குகள் எதுவும் சீரான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. ஒவ்வொரு லீக்கிலும் ஒழுக்காற்று நடவடிக்கை வெவ்வேறு விதமாக தமது குறுகிய லாபங்களுக்காக எடுக்கப்படுகிறது. இதை விட மோசமான சம்பவங்கள் நிகழ்ந்ததுள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு இவ்வளவு பெரிய தடை ஏற்க கூடியதல்ல. சிறப்பான பெறுபேற்றினை பெற்று வரும் காலங்களில் இவ்வாறு நீண்ட கால தடை அவ்வணியை உதைபந்தாட்ட அரங்கில் இருந்து ஓரம் கட்டி விடும். உண்மையில் சென் மேரிஸின் ஊர் ரசிகர்கள் தங்களின் மனநிலையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சென் மேரிஸ் அணிக்கு ஊர் ரசிகர்கள் அளவிற்கு வெளியூர் ரசிகர்களும் உண்டு. சில ரசிகர்களின் தவறான நடவடிக்கைகளால் ஓரு அணி பாதிக்கப்படும் போது நிறைய உதைபந்தாட்ட ரசிகர்களை கவலைபடுத்துகிறது. சென் மேரிஸ் ரசிகர்களே சர்வதேச போட்டிகளிலேயே இவ்வளவு தொழில் நுட்ப வசதிகள் உள்ள போதே எவ்வளவு தவறுகள் இடம் பெற்றுள்ளது என்பதை பாருங்கள். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு செய்த சம்பவம் இன்று மாபெரும் அணியை சில காலம் மௌனிக்க செய்து உதைபந்தாட்ட அரங்கை வெறுமையாக்கியிருக்கிறீர்கள். இனியாவது அவர்கள் சிறப்பாக விளையாட ஒத்துழைப்பு வழங்குங்கள்
Patrick Edward Henryபாழ் லீக் ( யாழ் லீக் ) 1975 களின் பின்னர் லீக் தன்னை வளர்க்கவும் இல்லை தன் அங்கத்துவ கழகங்களையும் வளர்க்கவில்லை மாறாக அதனை நாசமாக்கியுள்ளன. இது சுயநலமல்ல ஒரு பொதுநலம்தான். தண்டனை என்பது ஒருவனை திருத்துவதாக அமையவேண்டும் மாறாக அழிப்பதாகவோ சீரழிப்பதாகவோ அமையக்கூடாது. லீக்கில் இருப்பவர்கள் தங்கள் பதவிகளை பாதுகாப்பதற்கு சில உதிரிகளை தங்கள் இருப்பிற்காக பயன்படுத்துதல்தான் தற்போதய நிலை. இந்நிலை மாற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதால் அனைத்து தடைகளையும் தகற்பதோடோ எமது விளையாட்டுத்துறையை வளர்த்தெடுக்க முடியும். எனவே அனைவரும் ஒன்றுணைந்து செயல்படுவோம்.