வங்கதேசத்திடம் மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா: டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை!!
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2017 (புதன்கிழமை)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி.
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலே அதிர்ச்சியை சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 குவித்தது.
இரண்டாவது இன்னிசை தொடங்கிய வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து களத்தில் இறங்கி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தொடக்கம் முதலே சொதப்பினர். பின்னர் 244 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாகியது.
20 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது. உலக கிரிக்கெட்டில் ஜாம்பவனாக வலம் வரும் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்திடம் டெஸ்ட் தொடரில் தோல்விவுற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.