இலங்கை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, சம்மாந்துறையில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், ஆயுதக் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.நிரந்தர வதிவிடங்களில் வசிப்போரை பதிவு செய்யுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஞாயற்றுக் கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 310 பேர் இறந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணமென ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்புவின் தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.பாடசாலைகள் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
மட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொலிக்கு தான் கண்டவற்றை பகிர்ந்துள்ளார்
கடந்த கால உள்ளநாட்டு போரின்போது பல தமிழர்கள் உயிரிழந்தும், பலர் மாற்றுத்திறனாளிகளாகவும் தற்போது வாழ்ந்து வருகின்ற நிலையில், யுத்த வடுக்களை தாண்டிவருவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.