இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது
இந்த அரசாங்கம் வடக்கில் போராட்டம் நடத்தியதற்காக அவர்களை கைது செய்ய முயற்சிக்கிறது. தெற்கில் உள்ளவர்களிற்கு ஆணைக்குழுக்களை அமைத்து அவர்களின் குடிமை உரிமைகளை பறிக்க முயல்கிறார்கள் என எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக சில நிமிடங்களுக்கு முன்பாக கரையை கடந்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கூலிப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை லண்டன் பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
முன்னாள் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் .........
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 55.
கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் நோக்கத்தோடு, இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 2961 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17 முதல் ஏப்ரல் 4 வரை இவர்கள் பல கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
3 பெண்கள்; 6 மாத குழந்தை உள்ளிட்ட 3 சிறுமிகள் சிலாபம், கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை பின்பற்றாத 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்துக்கு செல்லாமல் மறைந்திருக்கும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இத்தாலிக்கு சென்றவர்கள் என்று இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
30 நாள் தனிமைப்படுத்துதல், மூடிய எல்லைகள் சீனாவுடனான வர்த்தகம் நிறுத்தம் ஆகிய விடயங்கள், வட கொரியாவை கொரோனா அற்ற நாடாக ஆக்கிவிட்டதாக அதன் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மற்றுமொரு நபர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.