சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா தன்னையும் தன் கூட்டாளி நாடுகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டால், வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மெக்ஸிகோ அருகே தென் பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிடக்கூடாது என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஜேம்ஸ் கோமிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் டாலியான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட 50 ஆயிரம் டன் எடையுள்ள விமான தாங்கி போர்கப்பல் கடலில் இறக்கப்பட்டது.தெற்கு சீன கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறது சீனா.
வடகொரியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால், அது பத்து நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சில பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.
கொரிய தீபகற்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை "மூழ்கடிக்க" வட கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கியில் காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் ஒரு நீதிபதி, 7 போலீசார் உட்பட அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 12 பேரும் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்திய காலித் மசூதின் செயல்கள் தனக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவரது மனைவி, அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று நடந்த தாக்குதலில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாநகர காவல்துறை துணை ஆணையாளர் மார்க் ரௌலி அறிவித்துள்ளார்.
டொனால்ட் றம்பின் மகள் அமெரிக்க வெள்ளைமாளிகையில் அதிகாரமில்லாத ஆனால் சகல அதிகாரங்களையும் தன்னிடமே வைத்துள்ள ஒருவர். இவாங்கா றம்ப் மகள் மாத்திரமென்றல்ல, தனது தந்தையின் பண ஆதிக்கத்தால் தொழில்துறையில் பரிணமித்தவர்.