ரஷ்யாவிலிருந்து சிரியா நோக்கி சென்ற ராணுவ விமானம் கடலில் விழுந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் அதில் சென்ற 91 பேரும் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.
வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ், சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், இந்த மோதலில் அளவுக்கதிமாக ரத்தம் சிந்தப்பட்டுள்ளதாகக்கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புப் பணிகளை நிறுத்த கோரும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை இஸ்ரேல் சீற்றத்துடன் நிராகரித்துள்ளது.
பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்றவர் என்று தாங்கள் கருதும் நபரிடம் ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய தூதர் கொலையை தில்லாக படம்பிடித்த போட்டோகிராஃபர் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவை, துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிக பெரிய சமூக ஊடக வலைதளமாக விளங்குகின்ற பேஸ்புக் (முகநுல்) போலி செய்திகள் பரப்பப்படாமல் இருப்பதற்கு புதிய அம்சங்களை தன்னுடைய வலைதளத்தில் அறிவித்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு உதவும் வகையில் இணையவழி மோசடிகளில் ரஷ்யா ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புவியின் வெப்பநிலையை குறைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் கலந்துரையாடி வருகின்றனர்.புவியின் வெப்பநிலை அதிகரிப்பினால் அண்டார்டிகா உள்ளிட்ட பனி பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டி உருகுவதால் கடல்மட்டம் உயரக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது.
சுற்றிலும் முற்றுகையிடப்பட்டுள்ள சிரியாவின் அலெப்போ நகரில் மேலும் 6 சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
வாழ்வதற்கான உரிமை, வெளிப்பாட்டு சுதந்திரம், கலாச்சார சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், உணவு, வேலை, கல்வி பெறுவதற்கான உரிமை இவையனைத்துமே மனிதனின் அடிப்படை உரிமைகளாகும்.
ஏறக்குறைய சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினர் அனைவரையும் பலிவாங்கியிருக்கும் விமான விபத்தில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்த 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரசிலிய அதிபர் மைக்கேல் டெமர் அறிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார். இந்நிலையில் அவரது வெற்றியில் சந்தேகம் இருப்பதாகவும்...
2010 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கு மலேசியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.மலேசிய ஊடகங்களின் செய்திபடி, 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை..