அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் புறநகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உள்பட எட்டுபேர் பலியாகினர்.
பிரித்தானியப் பொலிசார் ஓல்ட் பெயிலி நீதிமன்றில் கொண்டுவந்து நிறுத்திய 6 பேரையும் தடுப்புக்காவலுக்கு மாற்ற அன் நீதிமன்றம் நேற்று உத்தரவிடடது. ஓசை படாமல் இவர்களை எப்போது பொலிசார் கைதுசெய்தார்கள் என்று தெரியவில்லை.
ஆப்கான் தலை நகர் காபூலில் இன்று காலை தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காபூல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 329 பேர் காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.
ஈக்குவடோரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 413 ஆக உயர்வடைந்துள்ளதோடு, 2,500 பேர் காயமடைந்துள்ளதாக ஈக்குவடோரின் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசியின் ஆடை வடிவமைப்பு மகாராணி எலிசபெத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.