அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம் மிகுந்த 777 ரகத்தைச் சேர்ந்த 128 விமானங்களை தரையிறக்க போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி முகமை வெற்றிகரமாக தன் பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை நேற்று செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. இதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார் இந்திய வம்சாவளி அமெரிக்கரான முனைவர் ஸ்வாதி மோகன்.
வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிரது.
உலகின் நீண்டகாலமாக பிரதமராகச் சேவை ஆற்றி வந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல்கலீஃப் இன்று காலமானார் என அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்டதட்ட 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது வைரஸ் அலை போல மீண்டும் பெருந்தொற்று தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன.