ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டியான டனாகா, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கான அங்கீகாரத்தை உலக சாதனைகளை அங்கீகரிக்கும் கின்னஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்மூலம், உலகின் அதிக வயதான பெண்மணியாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
கென்யா நோக்கி புற்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக...
"எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்" என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்ட 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வார இறுதியில் வடகொரியா- தென் கொரியா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதையடுத்து இருநாட்டு எல்லையில் வடகொரியாவை நோக்கி நிறுவப்பட்ட பிரம்மாண்ட ஒலிபெருக்கி மூலம் தாம் செய்துவந்த பிரசாரத்தை நிறுத்தியுள்ளது தென் கொரியா.
கனடாவின் டொரொன்டோ நகரில் திங்களன்று ஒரு வாடகை வாகனத்தை ஏற்றி, பாதசாரிகள் 10 பேரைக் கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் நபரிடம் அந்நாட்டு காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் நஷ்வில்லில் உள்ள வோஃபில் ஹவுஸில் நிர்வாணமான துப்பாக்கிதாரி ஒருவர் 4 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.